நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!!

Photo of author

By Sakthi

நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!!

Sakthi

Updated on:

நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!!

பிரபல ஹிந்தி நடிகை ஒருவர் சினிமாவில் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன் என்று வெளிப்படையாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜன்னட் 2 திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஈஷா குப்தா. இவர் தொடர்ந்து ராஸ், சக்ரவியூஹ், கோரி டெரா பியார் மெயின் என்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். வீடவடு என்ற தெலுங்கு திரைப்படங்களில் நடிகை ஈஷா குப்தா அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழில் யார் இவன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் நடிகை ஈஷா குப்தா அவர்கள் சினிமாவில் நடந்த பாலியல் தொல்லை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசிய நடிகை ஈஷா குப்தா அவர்கள் “சினிமாவில் நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர் கொண்டிருக்கின்றேன். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் இயக்குநர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து அந்த இயக்குநர் என்னை பற்றி தவறான கருத்துக்களை பரப்பினார். இதனால் நான் சில பட வாய்ப்புகளை இழந்தேன்.

இது போலவே இன்னொரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இதே நோக்கத்துடன் என்னிடம் அணுகினர். நான் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டு சுதாகரித்து மறுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.