எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது.. என் காதலன் உடனே இதை செய்தார்!!அதனால் தான் கல்யாணத்திற்கு முன்பே நான் கர்ப்பமானேன்!!

Photo of author

By Rupa

அமலாபால் மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் இருவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூன்று வருடங்கள் சிறப்பான தம்பதியாக வாழ்ந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இருவருக்குமிடையே மன கசப்பு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. விவாகரத்து பெற்ற அந்த ஆண்டு இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையில் இருந்து வெளியே வந்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து ஜெகத் என்பவரை காதலிப்பதாக இணையதளத்தில் அறிமுகம் செய்தார். தற்பொழுது இருவருக்கும் திருமணம் நடைபெற்று இலை என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இது குறித்த சுவாரசிய தகவலை அமலா பால் யூடியூப் பேட்டியில் வெளியிட்டுள்ளார். அதில், நான் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தேன். அதனால் தான் உடனடியாகவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நான் ஒரு ஹீரோயின் என்று எனது கணவருக்கு ஆரம்ப கட்டத்தில் தெரியாது.

முதல் கட்ட வாழ்க்கையில் பெரிய அளவில் நான் இழப்பை சந்தித்ததால் இரண்டாம் கட்ட வாழ்க்கை தொடங்குவதில் தயக்கங்கள் இருந்தது ஆனால் எனது கணவர் இதனை அனைத்தையும் மாற்றிவிட்டார். நாங்கள் டேட்டிங் ஆரம்பித்த ஒரு மாத காலத்திலேயே கர்ப்பம் தரித்து விட்டதால் உடனடியாக திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்.