பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!

0
191

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்.அது மட்டுமன்றி வேறு நாட்டிற்கு குடியேறி விடுங்கள், வெளியேறி விடுங்கள் என்று அச்சுறுத்தி உள்ளார்.

நேற்று தொலைக்காட்சி ஒன்றில் மக்களுடன் சந்திப்பில் இருந்த பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் இது ஒரு கலந்துரையாடல் இல்லாமல் ஒரு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது.

இதில் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் , “நாடு முழுவதும் அவசரகால நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் வேளையில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மூன்று மடங்காக அதிகரிக்கும் பணிக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். என்னை தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். தடுப்பூசி போடவில்லை என்றால் உங்களை நான் கைது செய்ய நேரிடும். கைது செய்து உங்களுக்கு தடுப்பூசி போட்டு விட நேரிடும், என்று அவர் கூறியதை பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர்.

மேலும் அவர், இதனை பார்த்த கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், “அனைவரையும் கைது செய்து ஊசி போட்டு விடும் நிலைக்கு என்னை தள்ளி விடாதீர்கள்” என்ற அதிர்ச்சியான தகவலைச் சொல்லி உள்ளார். அதேபோல் அதற்கான வலிமையும் எனக்கு உள்ளது. ஆனால் அதை நான் செய்ய விரும்பவில்லை நீங்களே முன் வாருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு தடுப்பு ஊசி வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள். இந்தியாவுக்கு செல்லுங்கள் அல்லது வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்லுங்கள். இல்லை அமெரிக்காவிற்கு கூட செல்லுங்கள். ஆனால் இந்த நாட்டில் இருந்தால் நீங்களும் ஒரு மக்கள் என கருதி நாங்கள் கொரோனாவை எதிர்கொண்டு எங்கள் கடமைகளை நாங்கள் காப்போம் என்று கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபரின் இந்த அதிகாரதன்மையான பேச்சை எதிர்த்து உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleபச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!
Next articleஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக இது கிடைக்கும்! மிஸ்கின் நம்பிக்கை!