தெய்வத்தின் ஆசியோடு விரைவில் வெளியே வருவேன்…..! சசிகலா அதிரடி …..!

0
133

சசிகலாவின் விடுதலை பற்றி தினமும் ஒவ்வொரு தகவல் வந்தவண்ணம் இருக்கின்ற நிலையில், அவரின் உடலை சம்பந்தமாக அடிக்கடி வெளிவரும் தகவலால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக விளக்கமளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆகப் போவதாக தகவல் வெளியானது ,அதன்பின்பு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விடுதலை ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை என்னவென்றால், சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் இன்னமும் செலுத்தாமல் இருப்பதாக தகவல் வெளியானது, எனவே அதை செலுத்திய உடன் தான் அவர் விடுதலை செய்யப்படுவார், என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

தகவல் வெளியானது போலவே சசிகலாவிற்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிறையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் போதுமானதாக இல்லை. ஆகவே வெளி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவரின் உறவினர்கள் விரும்புகின்றார்கள். என செய்தி பரவியது சசிகலா வெளியே இருந்தவரையில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மற்றும் உணவு முறைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்தார். அதேபோன்ற முறைகளை சிறைக்குள் சசிகலாவால் பின்பற்ற முடியாத காரணத்தால், அவருக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்பட தொடங்கியது, எனவே அவரை உடனடியாக வெளி மருத்துவமனையில் வைத்து முறையாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் இல்லையென்றால் டயாலிசிஸ் வரை சென்றுவிடும் சிறுநீரக பாதிப்பு என்று சசிகலாவின் உறவினர்கள் பதற்றத்தில் உள்ளார்கள் எனவும், வெளியாகும் தகவலால் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கடிதம் வாயிலாக சசிகலாவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், அதற்கு சசிகலா அனுப்பியிருக்கும் பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது, எனக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக வெளியாகும் தகவல் முழுக்க முழுக்க உண்மை தன்மை அற்றது எனவும், நான் வணங்கும் அந்த தெய்வத்தின் ஆசியோடும் என் என் உடன் பிறவா சகோதரியின் ஆசியோடும் அவருடைய கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துக்களால் இன்றுவரை நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleவாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய செவிலியருக்கு நேர்ந்த பரிதாபம்!! நடந்தது என்ன..?
Next articleதமிழகத்திலேயே முதல்முறையாக அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கேன பொருத்தப்பட்ட பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் !!