நகைச்சுவை நடிகராக களத்தில் இறங்கிய ‘சூரி’, சினி பீல்டில் நுழைவதற்கு முன் பல கஷ்டங்களை தாண்டி உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் தற்போது ஹீரோவாகவும் ‘விடுதலை’ படம் மூலம் அறிமுகமானார். விடுதலை பட வெற்றியை தொடர்ந்து ‘கருடன்’ படம் நடித்திருந்தார். இதுவும் ‘விமர்சனம் ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி கண்டது’. அதைத்தொடர்ந்து ‘கொடுக்காளி’ படம் நடித்திருந்தார். இந்தப் படம் ‘விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக தொய்வடைந்தது’.
அதனைத் தொடர்ந்து, ‘விடுதலை 2’ படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் வெளியாகி ‘மூன்றே நாட்களில் 22. 25 கோடி வசூல் செய்துள்ளது’. இந்தப் ‘பட ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது சூரி, படையப்பா படத்தில் கூட ஃபேன் பாயாக பணிபுரிந்துள்ளேன்’.
இதுவரை ’95 இயக்குனர்களிடம் வேலை செய்து உள்ளேன்’. தற்போது “தனது அப்பா,அம்மாவின் சுயசரிதத்தை இயக்கி ஆவேன் எனவும், அவர்களின் வாழ்க்கையில் அவ்வளவு விஷயம் பொதிந்துள்ளது. இப்பொழுது சொன்னால் சாதாரணமாக தான் இருக்கும். நிச்சயமாக படம் ஆக எடுத்தபின் இந்த படம் அனைவருக்கும் பிடித்ததாக அமையும்” என்றார். கூடிய விரைவிலேயே அவர் ‘இயக்குனராகவும் வெற்றி காண்பார்’ என எதிர்பார்க்கலாம்.