30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!!

Photo of author

By Sakthi

30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!!

Sakthi

30 வயதில் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆகி இருப்பேன்! திருமணம் குறித்து பிரபல நடிகை தமன்னா பேட்டி!

 

பிரபல நடிகை தமன்னா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சினிமாவில் நுழைந்த பிறகு 30 வயதில் கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறி இருப்பேன். ஆனால் தற்பொழுது பிரபல நடிகையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

நடிகை தமன்னா அவர்களின் காதல் விவகாரம்தான் தற்பொழுது சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  நடிகை தமன்னா அவர்கள் ஹிந்தி நடிகர் விஜய் வர்மா அவர்களுடன் காதலில் இருப்பதாக வந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

 

மற்ற நடிகர்களுடன் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக மறுத்து விட்ட நடிகை தமன்னா அவர்கள் நடிகர் விஜய் வர்மா அவர்களுடன் ஒருபடி மேலே சென்று மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைமணம் பற்றி நடிகை தமன்னா அவர்கள் பேசியுள்ளார்.

 

நடிகை தமன்னா அவர்கள் சினிமாவிற்கு வந்த புதிதில் சினிமா துறையில் 10 வருடங்கள் இருப்பதே கடினம் என்று நினைத்தாராம். இதன்ல் 30 வயதில் தனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் என்று திட்டம் போட்டு வைத்து இருந்தாராம். ஆனால் 30 வயதில் மீண்டும் புதிதாக பிறந்துள்ளது போல உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

மேலும் திருமணம் குறித்து நடிகை தமன்னா அவர்கள் “திருமணம் என்பது பெரிய பொறுப்பு. அது பார்ட்டி அல்ல. திருமணத்திற்காக பல விஷயங்கள் செய்ய வேண்டும். அதனால் அந்த பொறுப்புகளை எப்போது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் நான் திருமணம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.