ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!!

0
85
#image_title

ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்கள் ரத்து!!

வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் அதிதீவிர பிபர்ஜாய் புயல் கடந்த 10 நாட்களாக  தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது. இந்த புயல் குஜராத் மாநிலம் கட்ச், சௌராஷ்டிரா இடையே நேற்று கரையைக் கடந்தது.

பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் போது சுமார்  50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் அதிதீவிர மழையாக மாறியுள்ளது. மேலும் பலத்த காற்று வீசியதால் சில பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்தது மற்றும் சில கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது.

குஜராத்தில் கரையைக் கடந்த புயலால் இருவர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 22 பேருக்கு  காயம் ஏற்பட்டுள்ளது எனவும், 442 கிராமகளில் வசிக்கும் மக்களை  பாதுகாப்பான பகுதிகளுக்கு   அனுப்பி வைத்துள்ளதாக பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பேரிடர் மீட்புப் படை முதற்கட்ட அறிக்கையை தெரிவித்திருந்தது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் ஜூன் 18 ஆம் தேதி வரை  99 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

author avatar
Jeevitha