என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி!

Photo of author

By Hasini

என்னோடு உல்லாசமாக இருந்தால் தான் இதெல்லாம் தருவேன்! மருமகளுக்கு மாமனார் நெருக்கடி!

பெண்களுக்கு எதிராக செயல்படுவது, வன்புணர்ச்சி செய்வது என அனைத்தும் வெளியிடங்களில் தான் நடக்கிறது என்றால், இங்கோ வீட்டிலேயே இந்த பெண்ணுக்கு நடக்கிறது. 70 வயதில் காலம் போன காலத்தில் மகள் போல் நடத்தாமல் இப்படி ஒரு மனிதன் பாருங்கள்.

32 வயது பெண் ஒருவர், தருமபுரி மாவட்டம், அரகாசனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, எர்ரப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவர் மாதேஸ், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்ததால் எனது பெண் குழந்தைகளுடன் பெங்களூருவில் உள்ள என்னுடைய சகோதரர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தேன்.

தற்போது கொரோனா காரணத்தால் ஊர் திரும்பி எனது கணவரது வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், 70 வயதான என்னுடைய மாமனார் ஆறுவேல் இரவு நேரத்தில் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்.

அவருடன் மனைவியாக வாழ்ந்தால் மட்டும் வீடு மற்றும் நிலம் எழுதி வைப்பதாகவும், இல்லை என்றால் எதுவும் தர முடியாது என்றும், கூறி மிரட்டி வருகிறார். மேலும் வீட்டில் இருக்கவும் கூடாது என கூறி, தனது இச்சைக்கு கட்டுப்பட வலியுறுத்தி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

எனவே எனக்கும், எனது பெண் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன் பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் கணவர் சொத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு இளம்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகன் இறந்துவிட்ட நிலையில் தந்தை ஸ்தானத்தில் இருக்க வேண்டிய மாமனாரே தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.