தலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!!

Photo of author

By Amutha

தலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!!

Amutha

I will give you 100 crores to comb your head!! Seeman action in Udayanidhi issue!!

தலையை சீவுங்க நான் 100 கோடி தரேன்!! உதயநிதி விவகாரத்தில் சீமான் அதிரடி!!

அமைச்சர் உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் விவாதம் ஆகி வரும் நிலையில் நாம் தமிழர் சீமான் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

பாஜக எப்போதுமே முன்னறிவிப்பு கொடுத்து எந்த செயலையும் செய்வது கிடையாது. அவங்க பாரத் என்றாலும் சூரத் என்றாலும் எனக்கு கவலை இல்லை. எப்போதுமே எனக்கு தமிழ்நாடு தான்.

ஆங்கிலேயர் வைத்தது தானே இந்து என்ற பெயரும், அதையும் மாற்ற வேண்டியது தானே!! ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்யாமல் இப்போது செய்வது ஏன்?? பாரத் என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை வைத்தால் எல்லாம் மாறிவிடும் என்றால் ஏன் ஒரே நாட்டில் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தர முடியவில்லை. இன்று பயிர்கள் காய்வது போல, நாளை மக்களின் வயிறும் காயும்.

இந்த ஒரே தேர்தல்! ஒரே நாடு! என்ற கொள்கையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்து இருந்தார். எனவே ராமேஸ்வரத்தில் தாமரையும், சூரியனும் நேரடியாக போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை நான் திரும்ப பெறுவேன்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் நான் முழுமையாக திமுக கட்சிக்கு ஆதரவு தருகிறேன் என்று சீமான் தெரிவித்தார்.

அது மட்டும் இல்லாமல் உதயநிதி தலைக்கு அயோத்தி சாமியார் விலை வைத்ததை குறித்த கேள்விக்கு  பதில் அளித்த சீமான், உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன். இந்த தலையை வெட்டு! நாக்கை வெட்டு! என்று கூறும் அவர் சாமியாரே இல்லை. கசாப்பு கடைக்காரர் என கலகலப்பான பதில் தெரிவித்தார்.