தன்னை உயர்த்திய மக்களை நான் உயர்த்துவேன்!! மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக சாடிய தவெக விஜய்!!

0
227
I will lift up people who lift themselves up!! I will not sneak like some people!! Vijay at Thaveka conference
I will lift up people who lift themselves up!! I will not sneak like some people!! Vijay at Thaveka conference

நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் வந்து ஆதரவு அளித்தனர்.

கழக மாநாட்டில் பேசிய இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக நான் என்ன செய்தேன் என யோசித்தேன். என்ன செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுத்தேன். அதற்காகத்தான் அரசியல் கட்சியை துவங்கினேன் என்று கூறியுள்ளார்.

தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக எதுவும் செய்யாமல் ஒழிந்து கொள்ளும் பழக்கம் என்னிடத்தில் இல்லை என்று மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கழகத் தலைவர் விஜய் அவர்கள் குறிப்பிடுவது போல் உள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து பின் தனக்கு அரசியல் வராது அதனால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று விலகிவிட்டார். இதனை தமிழக வெற்றிக் கழக மாநில அளவிலான மாநாட்டில் இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மேற்கோள் காட்டியதைப் போன்று இவரின் பேச்சு உள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு எளிமையாக்கப்பட்ட விடுமுறை விண்ணப்ப வசதி!!
Next articleபொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!