வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன்!! சீன் போடும் நடிகை!!

Photo of author

By CineDesk

வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன்!! சீன் போடும் நடிகை!!

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி பின் வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் அதுல்யா தனக்கு கிடைத்த வாய்ப்பை இப்படி சீன் போட்டா இழப்பது! இவர் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலமாக தான் தமிழ்சினிமாவில் முதல் முதல் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அப்போது பெரிதும் வரவேற்பு இல்லை. அவர் குறும்படங்கள் மற்றும் டிக் டாக் மூலம் தான் பெரிதும் பிரபலமானார். அதன் மூலமே அத்துல்யாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் ஏமாலி. அடுத்த சாட்டை. நாடோடிகள் 2. சுட்டு பிடிக்க உத்தரவு மற்றும் கேப்மாரி போன்ற பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் அத்துல்யாவிற்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அப்துல்லா நடித்த படங்கள் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணம் அதுல்யாதான் தான் என்றும் கூறுகிறார்கள். ஆம் அவரின் தவறான அணுகுமுறையும் படங்களின் தோல்விக்கு பெரிதும் காரணமாகிவிடுகிறது. அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் மிகவும் தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதை உண்மையாக்கிய சம்பவம் தற்போது ஒரு நடைபெற்றுள்ளது. அவரை தேடிவந்த வாய்ப்பை அவரே சீன் போட்டுக் கெடுத்துக் கொண்டார். பிரபல ஒளிப்பதிவாளரும் கதாநாயகனுமான நட்ராஜ் நடித்த சதுரங்க வேட்டை படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புது படத்திற்கு அதுல்யாவை
கதாநாயகியாக நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். ஆனால் அதுல்யா  நான் நட்ராஜ்க்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது அந்த வாய்ப்பு காளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம். அதுல்யா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக மட்டும் தான் உள்ளார். இன்னும் முன்னணி நடிகையாக ஆகவில்லை. அதற்கு முன்னரே இவ்வளவு சீன் போடுவது சரியில்லை என கூறி சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறது.