ஸ்ரீகாந்த் வைத்து படம் இயக்கவும் மாட்டேன் அவருடன் நடிக்கவும் மாட்டேன்!! கட்டன் ரைட்டாக ஆர்டர் போட்ட இயக்குனர்!!

Photo of author

By Gayathri

ஸ்ரீகாந்த் வைத்து படம் இயக்கவும் மாட்டேன் அவருடன் நடிக்கவும் மாட்டேன்!! கட்டன் ரைட்டாக ஆர்டர் போட்ட இயக்குனர்!!

Gayathri

Updated on:

i-will-not-direct-a-film-with-srikanth-and-i-will-not-act-with-him-the-director-who-ordered-it-right

கே பாலச்சந்தர் உடைய இயக்கத்தில் ஜன்னல் மரபுக் கவிதை என்ற தொடரில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். மேலும் இவர் தமிழ் சினிமா துறைக்கு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நுழைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. எனினும் இவர் நட்சத்திர நடிகராக இன்றளவும் உயர முடியாமல் உள்ளார் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. இவர் ரோஜாக்கூட்டம் படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குறிப்பாக பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக மாறினார்.

அதன் பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்தும் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் செல்லா காசாக மாறிவிட்டது. மீண்டும் இவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக சசிகுமார் இயக்கத்தில் உருவான பூ என்ற படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நடிகர் விஜய் உடன் நண்பன் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் சமீப காலமாகவே இவர் அளிக்கும் பேட்டிகளில் தன்னுடைய படங்கள் குறித்து அதிக அளவில் பேசிய வருகிறார். இப்படி இவர் பேசி இருக்கும் பேட்டிகளில் சுந்தர் சி தன்னைக் குறித்து பேசியதையும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பகிர்ந்தவை, நான் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன் என்றும், என்னுடைய இயக்கத்தில் எந்த நடிகரை வைத்து வேண்டுமானாலும் படம் எடுப்பேன் என்றும் சுந்தர் சி அவர்கள் தெரிவித்ததாகவும், மேலும், ஸ்ரீகாந்தை வைத்து நான் படம் எடுக்கவே மாட்டேன் என்றும் சுந்தர் சி அழுத்தமாக கூறினார் என்று ஸ்ரீகாந்த்  பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு சுந்தர்சிக்கு உரியதற்கான காரணத்தையும் விளக்குகிறார் ஸ்ரீகாந்த்,

ஒருமுறை தன்னுடைய கால்ஷீட் கேட்டு சுந்தர் சி அவர்களின் மேனேஜர் தன்னுடைய அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்பொழுது தான் அங்கு இல்லாததால் தன்னுடைய உறவுக்காரரும் பணியாலும் ஒருவர் சுந்தர்சியின் மேனேஜரிடம் முதலில் நீங்கள் என்னிடம் கதையை சொல்லுங்கள். எனக்கு கதை பிடித்திருந்தால் அதை நீங்கள் ஸ்ரீகாந்த் அவர்களிடம் கூறலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனை அந்த மேனேஜர் சுந்தர் சி யிடம் சென்று எவ்வாறு கூறினார் என எனக்கு தெரியவில்லை. அதற்கு சுந்தர் சி அவர்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரிடம் கதையை சொல்லி தான் ஹீரோவினுடைய கால்ஷீட் கிடைக்க வேண்டுமென்றால் எனக்கு அந்த ஹீரோ தேவையில்லை என கோபம் கொண்டதால் என்னை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சொல்லியதாக ஸ்ரீகாந்த் விளக்கமளித்துள்ளார்.