நீயின்றி நானில்லை! காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!

Photo of author

By Sakthi

நீயின்றி நானில்லை! காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!

Sakthi

Updated on:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவருடைய மகன் அஜித்குமார் 26 வயது மதிக்கத்தக்க இவர், பால் வியாபாரி. அதே பகுதியைச் சார்ந்தவர் பெருமாள் மகள் 22 வயதான ரீட்டா காட்பாடியிலுள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி 2ம் வருடம் படித்து வந்த இவர், நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராகவும், இருந்து வந்தார். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், அஜித் குமாருக்கு தன்னுடைய தயாருடன் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அஜித்குமார், அதே பகுதியிலுள்ள ஏரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்து கொண்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமார் சட்டத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜித்குமார் தவறி விழுந்த உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு நடுவில் காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலையறிந்து கொண்ட காதலி ரீட்டா மன வேதனையடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இரவு 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அருகிலுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குடியாத்தம் தாலுக்கா மற்றும் டவுன் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.