நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு!

0
127
I will not trust the people of Coimbatore! Udayanidhi's action talk!
I will not trust the people of Coimbatore! Udayanidhi's action talk!

நான் கோவை மக்களை நம்ப மாட்டேன்! உதயநிதியின் அதிரடி பேச்சு!

தமிழ்நாடு முழுவதும் தற்பொழுதுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிக அளவு விதிமீறல்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிய வண்ணமாக தான் உள்ளது. ஆனால் இம்முறை திமுகவை அதிக இடங்களில் கைப்பற்றி வென்றது. வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில் நேரு என்ற நகர் உள்ளது. அங்கு திமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி மற்றும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் உதயநிதியின் பேச்சு அதிரடியாக இருந்தது. ஏனென்றால் கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி நடந்த பொழுது பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி அவர்கள் கோவை மக்களை நம்ப முடியாது அவர்கள் குசும்பு பிடித்தவர்கள் என்று கூறினார். அது அவ்வாறு நான் கூறியது மிகவும் தவறு என்று தற்பொழுது நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஏனென்றால் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 96 இடங்ளில் மக்கள் ,திமுக வெற்றியடைய வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஏழு நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் வெற்றியடைந்துள்ளது. அதனால் நான் கூறிய வார்த்தை வாபஸ் வாங்கி கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதேபோல செந்தில் பாலாஜி அவர்களும் சொன்னதை செய்து காட்டியுள்ளார். இது அனைத்தும் அவரை மற்றும் சாராது முதல்வரின் எட்டு மாத கால ஆட்சிக்கும் கிடைத்த பயனே என்று தெரிவித்தார். மேலும் கோவை மாநகராட்சிக்கு ரூ. 200 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மிகுந்த பூங்கா அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் மக்கள் முன்னிலையில் அதிரடியாக பேசினார். மேலும் 500 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவி தொகையாக தலா 10,000 ஆகியவற்றையும் வழங்கினார்.

Previous articleதாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!