Breaking News

அந்த ஹீரோக்காக படுக்கையை கூட பகிர்வேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!!

Photo of author

By Vijay

அந்த ஹீரோக்காக படுக்கையை கூட பகிர்வேன்.. பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!!

திரையுலகில் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தனக்கு பிடித்த ஹீரோ படம் என்றால் படுக்கையை கூட பகிர்வேன் என பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் வேறு யாருமல்ல நடிகை ரேமா காயத்ரி தான்.

இவர் தமிழில் டூரிங் டாக்கீஸ் என்ற படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் இறுதியாக பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான வா வரலாம் வா என்ற படத்தில் நடித்திருந்தார். இதுதவிர வெப் தொடர் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ரேமா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அட்ஜெஸ்மெண்ட் செய்வது தவறில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனக்கு நடிகர் சித்தார்த்தை பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற படுக்கையை கூட பகிர தயாராக உள்ளேன்” என சிறிதும் கூச்சமே இன்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதற்கு முன்னதாக அளித்த பேட்டியில் தான்  சினிமாவில் பெரிதாக ஜொலிக்காமல் போனதற்கு காரணம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாதது தான். நடிக்க சொன்னால் ஓகே அதுக்காக படுக்க சொன்னால் எப்படி? என கேள்வி எல்லாம் எழுப்பி இருந்தார். ஆனால் அவரே தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஆதரவாக பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒருபக்கம் எதிர்ப்பு மறுபக்கம் ஆதரவு என பேசி வரும் ரேமாவை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

தன்னை விட இளைய நடிகைக்கு மகனாக நடித்த விஜய்.. கில்லி படம் குறித்து வெளியான தகவல்..!!

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!