எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்:
சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது பற்றி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் உள்ளது போல் புதிய திட்டம் ஒன்றுமில்லை. அரைத்த மாவை அரைத்தது போலவே உள்ளது என்று கூறியிருக்கிறார்.
தேர்தலில் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ1000 வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர். வெற்றி பெற்ற பின்னர் அதை சுருக்குகின்றனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்:
அறிஞர் அண்ணா ஆட்சியில் தான் தமிழ்நாடு மாநிலம் என்று பெயர் உருவாக்கப்பட்டது. அப்படி இருக்க ஆட்சியில் அண்ணா பெயரை செயல்படுத்தாமல் மு கருணாநிதி பெயரை சூட்ட நினைக்கிறார் ஸ்டாலின்.
நிறைய தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர் பெவிலியனுக்கு அவர்கள் பெயர் ஏன் வைக்கவில்லை.அது மட்டுமில்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எங்கள் பெயர் உள்ள கல்வெட்டுகளை நீக்கி விடலாம் ஆனால் மக்கள் மனதில் இருந்து என்றும் நீக்க முடியாது என்று சவால் விட்டுள்ளார்.