எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக.
தன் கையில் இருந்த அனைத்து பைசாவையும் போட்டு எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்ற பெருமை இந்த படத்திற்கே சேரும்.
அப்படி இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் எடுக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்தும் இந்த படம் வெளிவரவில்லை. காரணம் இன்னொரு பாடலை இந்த படத்தில் இணைக்கலாம் என்று எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். அப்பொழுது இடைத்தேர்தலும் வந்திருந்தது. சமயத்தில் படம் வெளி வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை தந்தார் எம் ஆர் வீரப்பன் எம்ஜிஆர் அவர்களுக்கு.
அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக அவர்களும் படம் வெளிவராமல் இருக்க, பல சிக்கல்களை எம்ஜிஆர் அவர்களுக்கு தந்தார்கள்.
போஸ்டருக்கான கார்ப்பரேஷன் வரியை சில பைசாக்களில் இருந்து ஒன்றரை ரூபாயாக உயர்த்தி இருந்தது திமுக. அந்தப் படம் எப்போது வரும், எந்த எந்த தியேட்டர்களில் ஓடுகிறது என்று விசாரித்து தெரிந்துகொண்டு படம் பார்த்தார்கள். படத்தின் போஸ்டர்களை அடிக்க முடியாமல் எம்ஜிஆர் அவர்கள் தவித்தார்களாம்..
மும்பையில் போஸ்டர்கள் பதிவிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அது இல்லாமல் போஸ்டர்களை கிழிக்க திமுக திட்டமிட்ட பொழுது, பெண்கள் போஸ்டரை கிழிக்க கூடாது என்று போராடினார்கள் என்று கூட செய்தி உண்டு.
அப்பொழுது மதுரை முத்து படம் வெளி வந்தால் நான் சேலை கட்டிக் கொள்கிறேன் என்று சவால் விட்டு இருந்தார்.
படமும் வெளிவந்தது. மாபெரும் வெற்றியும் இந்த படம் தேடித் தந்தது. இடைத்தேர்தலிலும் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். இதனால் மக்கள் சேலையை வாங்கி மதுரை முத்துவிற்கு அனுப்பினார்கள்.