உங்களுடன் தான் லியோ படத்தை பார்ப்பேன்!! பிரபல நடிகருக்கு பதிலளித்த லோகேஷ்!! 

0
54
i-will-watch-the-movie-leo-with-you-lokesh-responds-to-famous-actor
i-will-watch-the-movie-leo-with-you-lokesh-responds-to-famous-actor

உங்களுடன் தான் லியோ படத்தை பார்ப்பேன்!! பிரபல நடிகருக்கு பதிலளித்த லோகேஷ்!! 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது.

கோலிவுட்டில் பிரபல இயக்குனரான அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஏராளமான வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் இன்று ஜவான் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் ஓடிடி இசை மற்றும் திரையரங்க வெளியிட்டு உரிமம், ஆகியவை ரூ.400 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வந்த நிலையில் முதல் நாளிலேயே 5 லட்சம் டிக்கெட் டிக்கெட் விற்று சாதனை படைத்தது.

இன்று ஜவான் படம் வெளியான நிலையில் பட குழுவை வாழ்த்தும் வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு டேக் செய்து நடிகர்  ஷாருக்கான் தனது ட்விட்டர் தளத்தில் “மிக்க நன்றி நேரம் கிடைத்தால் படத்தை பார்க்கவும்”. மேலும் படத்தை தமிழில் பார்த்து சரியாக உள்ளதா? என்று கூறுங்கள். லியோ படத்திற்கு என்னுடைய அன்பு எப்போதும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த லோகேஷ் ஜவான் படத்தை பார்க்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். லியோ வெளியானவுடன் அதை உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன். படத்தைப் பற்றிய உங்களின் கருத்தை அறியவும் விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஜவான் படம் என்று வெளியாகும் நிலையில் ஷாருக்கான் மற்றும் லோகேஷ் கனகராஜன் அன்பை பரிமாறும் இந்த உரையாடல்களை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.