விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் முதல் காட்சியினை குடும்பத்துடன் பார்த்த சேத்தன் அவரது மனைவி தேவதர்ஷினி மற்றும் அவரது மகள் மூவரும் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தனர்.
அதில் நடிகை தேவதர்ஷினி பேசியிருப்பதாவது :-
விடுதலை பாகம் 2 திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. நானும் என்னுடைய மகளும் என்னுடைய கணவரின் அருகில் அமரவே இல்லை. அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் பயங்கரமாக அமைந்திருந்தது. எத்தனையோ வில்லன்களை பார்த்த பொழுதிலும் இத்திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தவர், இளையராஜாவை குறித்து நான் என்ன சொல்ல, அவர் தெய்வத்தை போன்றவர் என்று கூறியிருந்தார்.
அதிலும் குறிப்பாக இத்திரைப்படத்தில் என்னுடைய கணவர் மிகவும் கொடூரமாக நடித்திருக்கிறார் ஆதலால் அவர் வீட்டிற்கு வந்தால் கூட வீட்டினுடைய கதவை திறக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் பாகம் 2 திரைப்படத்தினை பார்த்த சேத்தன் செய்த செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது :-
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா இடங்களிலும், மக்கள் ஆவலுடன் படத்தை வந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். முதல் பாகத்திலும் நான் நடித்து இருந்தேன். அதை விட இரண்டாம் பாகத்தில் என்னுடைய கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் வெற்றி மாறனின் எழுத்தும், டைரக்ஷனும் தான். வெற்றிமாறன் என்றுமே ஏமாற்ற மாட்டார் என்றும் நடிகர் சேத்தன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.