நான் சில்க் ஸ்மிதாவை காதலித்து திருமணம் செய்திருப்பேன்! பிரபல நடிகர் பகீர் பேட்டி! 

Photo of author

By Rupa

நான் சில்க் ஸ்மிதாவை காதலித்து திருமணம் செய்திருப்பேன்!! பிரபல நடிகர் பகீர் பேட்டி!!
தன்னுடைய மனைவியை காதலிக்காமல் இருந்திருந்தால் நான். சில்க் ஸ்மிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று பிரபல நடிகர் ஜி.எம் குமார் அவர்கள் ஓபனாக பேட்டியளித்துள்ளார்.
இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கும் ஜி.எம் குமார் அவர்கள் 1985ம் ஆண்டு வெளியான கன்னி ராசி திரைப்படத்தில் எழுத்தாளராக சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் ஜி.எம் குமார் அவர்கள் தொடர்ந்து காக்கிச்சட்டை, மைடியர் மார்த்தாண்டன் ஆகிய திரைப்படங்களுக்கும் எழுத்தாளராக பணியாற்றினார்.
பின்னர் 1986ம் ஆண்டு வெளியான அறுவடை நாள் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக மாறிய ஜி.எம் குமார் அவர்கள்  தொடர்ந்து இரும்பு பூக்கள், உருவம், பிக்பாக்கெட் ஆகிய நான்கு திரைப்படங்களை மட்டும் இயக்கினார்.
அதன் பின்னர் 1993ம் ஆண்டு வெளியான கேப்டன் மகள் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் குருவி, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, கர்ணண் என்று பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜி.எம் குமார் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் பல்லவியை காதலிக்காமல் இருந்திருந்தால் நான் சில்க் ஸ்மிதா அவர்களை காதலித்து திருமணம் செய்திருப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அந்த பேட்டியில் ஜிஎம் குமார் அவர்கள் “நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள் ஒரு அருமையான நடிகை மற்றும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் கொண்ட பெண். அந்த சமயம் நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள்  தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள கூடிய ஒரு நபரை தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நானும் என்னுடைய மனைவி பல்லவியை சீரியஸாக காதலித்துக் கொண்டிருந்தேன்.
அதனால் என்னால் நடிகை சில்க் ஸ்மிதா அவர்களை கதாலிக்க முடியவில்லை. நான் பல்லவியை காதலிக்காமல் இருந்திருந்தால் நான் சில்க் ஸ்மிதா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.