Cinema Talkies: தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் தற்போது மாறிவிட்டது. முன்னாடி எல்லாம் முன்னணி நடிகர்களின் படம் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இப்போ நிலைமை அப்படி இல்ல. நிலைமை தலைகீழா மாறிடுச்சு. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக திரில்லர் ஜோன், சைக்கோ கதையம்சம் கொண்ட படங்களை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
அந்த வகையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான லெவன் படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் லோகேஷ் அஜிஷ் இயக்கத்தில் நடிகர் நவீன் சந்திரா நடிப்பில் லெவன் படம் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட சைக்கோ திரில்லர் கதையமைப்பில் படம் வெளியானதால் ரசிகர்களை இந்த படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பொதுவாக சைக்கோ கில்லர் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.
ஆனால் இந்த படத்தில் இந்த சைக்கோ சாகக்கூடாது, மீதி இருக்கும் அந்த ஒருவனையும் இவன் தண்டிக்க வேண்டும் என படம் பார்த்த ஒவ்வொருவரும் யோசிக்க வைத்தது இந்த படம். அண்மையில் படத்தின் இயக்குனர் லெவன் படத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார். உண்மையில் இந்த படத்தின் கதையை இவர் எழுதிய போது சிம்புவை ஹீரோவாக வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் படத்தை எழுதி இருக்கிறார். பின்னர் பல வகைகளில் பலரை தொடர்பு கொண்டு சிம்புவை சந்தித்து இந்த கதையை சொல்லிவிட வேண்டும் என்று இவர் யோசித்த போதும் இவரால் சிம்புவை நெருங்க முடியவில்லை.
கடைசியில் தான் நவீன் சந்திராவிடம் கதையை சொல்லி ஓகே செய்து லெவன் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் அஜிஷ். இந்த லெவல் படத்தில் நவீன் சந்திராவுக்கு பதில் சிம்பு நடித்திருந்தால் படம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.