மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

Photo of author

By Rupa

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

Rupa

IAS cleaning the marina! Chennai High Court Right Left Questions!

மெரினாவை சுத்தம் செய்யும் ஐஏஎஸ்! சென்னை உயர் நீதிமன்றத்தின் ரைட் லெப்ட் கேள்விகள்!

நமது இந்தியாவிற்கு பல பெருமைகள் உண்டு.அந்த பெருமைகளில் ஒன்று தான் இரண்டாவது பெரிய கடல் என்று கூறும் நமது மெரினா கடற்கரை.இந்த கடற்கரியை சுற்றி பல நகாடி கடைகள் உள்ளது.பொதுமக்கள் தினந்தோறும் மெரீனா கடற்கரைக்கு வந்து தங்களின் அன்றாட நேரத்தை கழித்து செல்கின்றனர்.அத்நியடுத்து அங்குள்ள அங்காடி கடைகளிலும் உணவு போர்ட்களை வாங்கி உண்கின்றனர்.அவ்வாறு உண்ணும் உணவின் காகிதங்களை அங்கேயே போட்டு விடுகிறோம்.

அந்த காகிதங்கள் கடற்கரைகளில் அசிங்கமாக அங்கும் இங்குமாக காணப்படுகிறது.அதுமட்டுமின்றோய் தற்போது புது புது வைரஸ்கள் உருவாகி வருகிறது.அந்தவகையில் அது சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.இதனை கண்டித்தும் மற்றும் மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்பதற்கும் கடைகள் ஒதுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத்து.இந்த வழக்கை தலைமை நீதிபதி கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

உலகின் மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை யாரும் சரியாக பரபரிப்பது இல்லை என்று நீதிபதிகள் இருவரும் கவலை தெரிவித்தனர்.மேலும் மாநகர மண்டல அதிகாரி மற்றும் மாநகர  காவல் அதிகாரி ஆகிய இருவரும் எதிர் மனுதாரராக விளங்கினர்.அப்போது அந்த எதிர் மனு தாரர்களிடம் நீதிபதிகள் பல கேள்விகளை கேட்டனர்.அதில் முதல் கேள்வியாக மெரீனா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடமிருந்து ஏதனும் அபராதம் வசூலிக்கப்படுகிறதா?

அப்படி வசூலிக்கப்பட்டால் எவ்வளவு அபராதம் வாங்குகின்றீர்கள்? என்றெல்லாம் கேட்டனர்.அதேபோல இரவு 10 மணிக்கு மேல் மாநகர காவல் பாதுகாப்பில் ஈடுபடுகிறதா என்றும் கேட்டனர்.மேலும் ஓர் படி மேலாக மெரீனா கடற்கரையை சுத்தம் செய்ய ஏன் ஐஏஎஸ் தலைமையில் குழு ஒன்று அமர்த்த கூடாது என்றும் கேள்வி கேட்டது.அதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது,இந்த குழுவானது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,மாநகராட்சி,பொதுபணித்துறை,காவல்துறை ஆகியோர் கொண்டு குழு அமைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.குழு அமைப்பது குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரும் 22-ம் தேதிக்குள் குறிப்பிட வேண்டும் என்று வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.