3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களும் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் நேற்றைய தினம் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கிறார். நில நிர்வாகத் துறையின் கூடுதல் ஆணையராக இருந்த கே எஸ் பழனிச்சாமி மீன்வளத் துறை ஆணையர் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். மீன்வளத் துறை ஆணையராக மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த கருணாகரன் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் தொழிலாளர் நல ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு கூடுதலாக தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனர் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.