இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.வெறும் ஐஸ்கட்டிகளாக இல்லாமல், காய்கறி மற்றும் பழசாறுகளை ஐஸ் டிரேக்களில் ஊற்றி அதனை கட்டிகளாக மாற்றி கொள்ளலாம்.
ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்து சுத்தம் செய்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. அதே போல ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால் முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும். சருமத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்பட்டுத்தும்.
சருமம் பொலிவு பெற :
காய்ச்சாத பாலை ஐஸ் டிரெக்கலில் ஊற்றி ஐஸ்கட்டிகளாக மாற்றி கொள்ளவும். அவை ஐஸ்கட்டிகளாக மாறியதும் அவற்றை முகத்தில் மசாஜ் செய்யவும். பாலில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பண்பு உள்ளது இதனால், சருமம் பொலிவாகும்.
அதே போல சில நேரங்களில் நாம் பேஸ் பேக், பேஸ் மாஸ்க் போன்றவை பயன்படுத்துவோம். அவற்றை செய்வதற்கு முன்பு ஐஸ்கட்டிகளால் முகத்தில் மசாஜ் செய்து கொண்டபின் பேஸ் பேக், பேஸ் மாஸ்க் செய்து கொண்டால் சருமம் இன்னும் பொலிவு பெறும்.
கருவளையத்திற்கு :
சிலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும்.கருவளையம் வருவதற்கு உணவு, வாழ்க்கை முறை என பல காரணங்கள் உள்ளன.அதற்கு ஐஸ்கட்டி சிறந்த தீர்வாக உள்ளது.ரோஜா பன்னீர், வெள்ளரிச் சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து ஐஸ்கட்டிகளாக மாற்றி கொள்ளுங்கள்.அவற்றை கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் நீங்குவதோடு கண்களும் புத்துணர்வு பெறும்.
முகப்பருவை நீக்க :
ஐஸ்கட்டிகளை முகப்பருவில் தடவி வர சருமத்தில் எண்ணெய் உற்பத்தி கட்டுபடுத்துவதுடன் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும் சுருங்கள் மறையும்.