ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

Photo of author

By Vinoth

ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை

Vinoth

ஒருநாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

 

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

 

இதில் கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் சுற்றில் நடையை கட்டியது.

 

அதைத்தொடர்ந்து அரை இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியாவை, இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவை, நியூசிலாந்து அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

 

இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

 

இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் திறமையை வைத்து ICC தனது சாம்பியன்ஸ் டிராபி அணியை அறிவித்துள்ளது.

 

அதில், ரச்சின் ரவீந்திரா(NZ), இப்ராஹிம் சார்டான்(AFG), கோலி(IND), ஸ்ரேயஸ் அய்யர்(IND), கே. எல். ராகுல்(IND), கிளன் பிலிப்ஸ்(NZ), ஓமர்சாய் (AFG), சாண்ட்னர்(C)(NZ), ஷமி(IND), ஹென்றி(NZ), வருண் சக்கரவர்த்தி(IND) அக்சர் பட்டேல் (IND) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்த பட்டியலில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயர் இடம் பெறவில்லை.