ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

Photo of author

By Sakthi

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதனை அடுத்து அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வியை தழுவிய போதிலும், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய மெதுவான ஆட்டம் காரணமாக அபராதம் விதித்த போதும், ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. 76.6 சதவீதம் 322 புள்ளிகளை பெற்று இருக்கிறது இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புலிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது.

கடந்த புதன்கிழமை நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்து 3வது இடத்தை பிடித்து இருக்கிறது நியூசிலாந்து அணி.

தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி 4-வது இடத்திலும். பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றது. தென் ஆப்பிரிக்கா, மற்றும் இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் ,போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.