ரஷ்யா உக்ரைன் விவகாரம்! போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரணை!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவத் துருப்புகளை நிறுத்தியிருந்தது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.

எந்நேரமும் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று தெரிவித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் கூற்று சரியாகவே இருந்தது.

அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் போர் தொடங்குவதற்கு முன்பாகவே தங்களுடைய நாடுகளை சார்ந்தவர்களின் உக்ரைன் நாட்டில் இருப்பவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அமெரிக்க மக்களும் மெல்ல, மெல்ல, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டிலிருக்கின்ற இந்தியர்களை மீட்பதற்கு இந்திய அரசாங்கம் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் தவணை முறையில் விமானங்களை அனுப்பி இந்திய மக்களையும், மாணவர்களையும், மீட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் தூதரகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்ய 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்திருக்கின்றன.இதன் காரணமாக, தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நுழைந்திருக்கக்கூடிய ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதன் காரணமாக உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு ரஷ்யப்படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

அதே சமயம் அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அணுஆயுத தடுப்புப் படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டிருப்பதால் 3ம் உலகப் போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உக்ரைனில் நடைபெற்றுவரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்த விசாரணை மிக விரைவில் நடைபெறவிருக்கிறது என்று சர்வதேச கிரிமினல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.