ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்!!

Photo of author

By Sakthi

ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்!!

Sakthi

ICC தரவரிசை பட்டியல் வெளியானது! இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றது. இதனிடையே இந்திய அணி எந்த ஒரு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வில்லை. இதையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 115 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
113 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அணி 116 புள்ளிகள் பெற்று இந்திய அணியை மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளி பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.