சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மூடும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி நேரத்தில் நேற்று பதிலளித்தார்.
அவர் கூறியதாவது சென்னை ஐசிஎப் சாதனைகளை எண்ணி மத்திய அரசு பெருமை கொள்கிறது உள்நாட்டு தொழில் நுட்பத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்பிரஸ் ரயிலை சிறப்பாக தயாரித்தது சென்னை ஐசிஎப் பின் சாதனைகளில் குறிப்பிடத்தக்க தாகும்.
டெக்னீசியன்கள் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இது கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலிக்கிறது எனவே சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை மேலும் நவீன மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும் அதை மூடுவதற்கான பேச்சுக்கே இடமில்லை என அவர் கூறினார்.
பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் புல்லட் ரயில் திட்டம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு ரயில் திட்டப் பணிகளை பரிசீலனையில் உள்ளது அவற்றை நிறைவேற்றுவது பற்றி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என அவர் அப்போது தெரிவித்தார்.