ஊட்டி,கொடைக்கானலுக்கு செல்ல போகிறீர்களா? அமலுக்கு வந்தது ஐகோர்ட் உத்தரவு!!

Photo of author

By Sakthi

Ooty and Kodaikanal:ஊட்டி,கொடைக்கானலுக்கு இ-பாஸ் இன்றி செல்லக் கூடாது உத்தரவு பிறப்பித்து உள்ளது ஐகோர்ட்.

தமிழகத்தின் மலைப் பிரதேச சுற்றுலா தளங்களாக  பொது மக்களின் முதன்மை தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் ஊட்டி,கொடைக்கானலுக்கு எத்தனை எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகின்ற மற்றும் எவ்வளவு வாகனங்கள் செல்ல முடியும் என்பது தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளும் மாறு சென்னை உயர்நீதிமன்றம் சென்னை ஐ ஐ டி க்கும் , பெங்களூர் என் ஐ எம் நிறுவனத்திற்கும் தரவுகளை சமர்பிக்க உத்தரவு விட்டு இருந்தது.

மேலும்  ஊடகங்களில் ஊட்டி,கொடைக்கானலில்  வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு அதிக படியாக வாகனங்கள் வருகையால் போக்குவரத்து  ஸ்தம்பித்தது போல  வெளியாகும் செய்திகள் பற்றி தரவுகளை சமர்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சமர்பித்தது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழங்கிய தரவு புள்ளி விவரத்தில்  குறைந்த அளவிலான  வானங்கள் வந்துள்ளது என்று வழங்கப்பட்டது. இதனை விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  காணொளி காட்சி மூலம் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறினார்கள் . அதில் வாகனங்களின் நம்பர் பிளேட் புகைப்படம் எடுக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட உள்ளது. இதன் மூலம் துல்லியமான தரவுகளை வழங்க முடியும் என்று பதில் தெரிவித்தார்கள்.

அதை மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வருகை புரியும் வாகனங்களின் எண்ணிக்கையை  துல்லியமாக கணக்கு செய்ய இ- பாஸ் முறையை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இந்த இ-பாஸில் ரெசார்ட் மற்றும் வாகனம் மற்றும் பயணிப்பவர்கள் விவரம் கொடுக்கப்படும் இதனால் இ-பாஸ் எடுத்தவர்கள்  ஊட்டி,கொடைக்கானலுக்கு  செல்வார்கள்.அதன் மூலம் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தாலாம் .