7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்!

0
132

7 வருசமா முடங்கிக் கிடந்த விஜய் சேதுபதி படத்துக்கு வந்த விடிவுகாலம்!

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப் படுத்தியவர் சீனு ராமசாமி. அவர்கள் இருந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர்.

இவர்களின் சமீபத்தைய படமான மாமனிதன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக சரியாகப் போகவில்லை. ஆனால் அதன் பின்னர் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில் பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் கூட்டணியில் உருவான இடம்பொருள் ஏவல் திரைப்படம் தயாரிப்பாளர் லிங்குசாமியின் பொருளாதாரப் பிரச்சனைகளால் ரிலீஸாகாமல் முடங்கியது. அவ்வப்போது இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்படுவதும், பின்னர் அதுபற்றிய செய்திகள் இல்லாமல் போவதும் நடந்துவந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. இதைத் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இயக்குனர் சீனு ராமசாமியும் அதை உறுதி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், வடிவுக்கரசி, காயத்ரி ஆகியோர் நடிக்க யுவன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.