மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT!

Photo of author

By Divya

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT!

தமிழகத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.கல்வி உதவித்தொகை,அரசு வேலையில் முன்னுரிமை,திருமண உதவித்தொகை,அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி தற்பொழுது திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 13(செவ்வாய் கிழமை‌) அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும்,ஆகஸ்ட் 20 அன்று கும்பகோணம் KMSS வளாகம் பேருந்து நிலையம் அருகிலும்,ஆகஸ்ட் 27 அன்று பட்டுக்கோட்டை கிராம சேவை கட்டிடம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளை எலும்பு முறிவு,காது மூக்கு தொண்டை பிரிவு,மன நல மற்றும் கண் உள்ளிட்ட பிரிவை சார்ந்த அரசு மருத்துவர் பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்குவார்கள்.

இந்த மருத்துவ பரிசோதனை சான்றின் அடிப்படையில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்:

1)குடும்ப அட்டை நகல்
2)ஆதார் அட்டை நகல்
3)பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
4)சிகிச்சை பெற்ற ஆவணங்கள்

மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் தஞ்சை மாவட்டத்தில் நடைபெறக் கூடிய சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்‌ தெரிவித்திருக்கிறார்.