உங்கள் தலையில் பல்லி விழுந்தால் அடுத்து இது தான் நடக்கும்!! தெரிந்துகொள்ளுங்கள்!!
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்லி சத்தமிட்டால்,அவை நம் மீது விழுந்தால் என்னவாகும் என்பது குறித்த பல தகவல் உலா வண்ணம் உள்ளது.அதிலும் பல்லி நம் தலை,தொடை,கால்,கை உள்ளிட்ட இடங்களில் விழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பலரும் அறிந்திருப்பீர்.பல்லி நமது உடலில் விழும் இடத்தை பொறுத்து அவை நமக்கு அதிர்ஷ்டமா? இல்லை துரதிர்ஷ்டமா? என்பது குறித்து கொள்ள முடியும்.
அதன்படி பெண்களில் தலை,புருவம்,பின்னல் போன்ற இடங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் அவை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.ஆனால் அதுவே வலப்பக்கத்தில் பல்லி விழுந்தால் அவை கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.பெண்களின் முகம்,கண் புருவம்,கை உள்ளிட்ட இடங்களில் பல்லி விழுந்தாலும் அவை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.
ஆனால் தலையில் பல்லி விழுந்தால் அவை ஆபத்து ஏற்படுவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.உங்களது தலையில் பல்லி விழுந்துவிட்டால் உடனடியாக தலைக்கு குளித்து விடுவது நல்லது.இரவு நேரத்தில் தலையில் பல்லி விழுந்தால் சிலரால் குளிக்க முடியாது.அப்படி இருக்கையில் ஒரு கிண்ணத்தில் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து தலை மீது தெளிக்கவும்.பின்னர் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடவும்.
தலையில் பல்லி விழுதல் என்பது ஒரு கெட்ட நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகளாகும்.
எனவே தலையில் பல்லி விழுந்தவர்கள் குளித்து விட்டு அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று சாமி வழிபாடு செய்வது நல்லது.ஒரு சிலர் தலையில் பல்லி விழுந்து விட்டால் தங்கள் முடியை கோயிலுக்கு காணிக்கையாக குடுத்து விடுவார்கள்.சிலர் சிறிதளவு முடியை மட்டும் வெட்டி காணிக்கையாக கொடுக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.