அண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள் – காயத்ரி ரகுராம்….!!

0
311
If Annamalai comes asking for votes, chase them away - Gayathri Raghuram...!!
If Annamalai comes asking for votes, chase them away - Gayathri Raghuram...!!

முன்னதாக பாஜகவில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நேற்று பல்லடம் சட்டமன்ற தொகுதி காளிவேலம்பட்டியில் காயத்ரி ரகுராம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “திருட்டு திமுகவிற்கும், திருட்டு பாஜகவிற்கும் தயவு செய்து வாக்களிக்காதீர்கள். பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு தெரிந்தது எல்லாமே பொய் சொல்வது, தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பிடுங்குவது, பொறுக்கித்தனம் செய்வது மட்டுமே.

ஒருவேளை அண்ணாமலை உங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வந்தால் அவரை ஓட ஓட விரட்டி அடியுங்கள். அண்ணாமலையை பாஜக கட்சிக்குள்ளேயே யாருக்கும் பிடிக்காது. எனவே பாஜக கட்டிக்குள்ளேயே தேர்தல் வைத்தால் கூட அண்ணாமலை வெற்றி பெற மாட்டார்.

மத்திய அரசு இப்போது வரை தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லதும் செய்யவில்லை. அதேபோல தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என்று மக்களை கொடுமைப்படுத்தி தான் வருகிறார்கள். ஜிஎஸ்டி வரியால் மக்கள் கைகளில் 100 ரூபாய் கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அதிமுகவிற்கு வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

Previous articleநடிகர் சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்….!!!
Next articleதமிழகம் வரும் ராஜ்நாத் சிங் – அடுத்தடுத்த தலைவர்களால் அனல் பறக்கும் களம்….