கல்வி நிறுவனங்கள் இதனை மீறினால் நடவடிக்கை! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்தும் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நாளை தை திருநாள் கொண்டாடப்படவுள்ளது.அதனால் இன்று முதலே பள்ளி மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்து விடுமுறையை வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.
இந்த சிறப்பு பேருந்தானது கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றது ஒரே நாளில் லட்சகணக்கில் மக்கள் பயணம் செய்தனர் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.மேலும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டது.
இன்று முதல் வருகின்ற 17 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில கல்வி நிறுவனங்களில் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளதாகவும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுக்கு எந்த கல்வி நிறுவனமும் பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது என அறிவுறுத்தியுள்ளது.மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் விடுமுறைகளை முழுமையாக கொண்டாடும் விதமாக அமைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.