அனைவரது வீட்டிலும் பல்லி நடமாட்டம் அதிகம் இருக்கிறது.குறிப்பாக சமையலறையில் பல்லி நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.இந்த பல்லிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம்.
தீர்வு 01:
கோழி முட்டை ஓடு
தேவைக்கேற்ப முட்டை ஓடு எடுத்து இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.இதை வீட்டு ஜன்னல்,கதவு,சமையலறை,பீரோ இடுக்கு உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் பல்லி நடமாட்டம் கட்டுப்படும்.
தீர்வு 02:
பூண்டு
வெங்காயம்
10 கிராம் பூண்டு மற்றும் 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாட்டிலில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பல்லி நடமாடும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை கட்டுப்படும்.
தீர்வு 03:
கருப்பு மிளகு
இரண்டு தேக்கரண்டி கருப்பு மிளகை மிஸ்சி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஜன்னல்,கதவு,சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூவி விடவும்.இப்படி செய்தால் பல்லி நடமாட்டம் கட்டுப்படும்.
தீர்வு 04:
கற்பூரம்
பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூர துண்டுகளை தூளாகி நீரில் கலந்து ஸ்ப்ரே செய்தால் பல்லி நடமாட்டம் கட்டுப்படும்.
தீர்வு 05:
காபி தூள்
புகையிலை
ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி காபி தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி புகையிலை தூள் போட்டு மிக்ஸ் செய்யவும்.பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜன்னல்,கதவு,மூலை முடுக்குகளில் ஸ்ப்ரே செய்தால் பல்லி நடமாட்டம் கட்டுப்படும்.