இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டால் என்ன நடக்கும்? பும்ரா பரபரப்பு பதில்!

0
140

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்கின்ற பார்ல் நகரில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நேற்று வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு தொடர்பாக விராட் கோலி அணியின் கூட்டத்தில் தெரிவித்தார் அவருடைய இந்த தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் அணியின் கேப்டனாக அவர் வழங்கிய பங்களிப்புக்காக நாங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம் அவருடைய முடிவு சரியா தவறா என்று நான் கருத்து கூற இயலாது என்று கூறியிருக்கிறார்.

அவருடைய தலைமையின் கீழ் விளையாடும்போது மகிழ்ச்சிகரமாக இருந்தது அவர் அணியில் ஒரு முக்கிய நபராக எப்போதும் இருப்பார் அவர் அணிக்கு எண்ணற்ற பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.

இன்னும் எண்ணற்ற பங்களிப்பை வழங்குவார் எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் வாய்ப்பு எனக்குக் வழங்கப்பட்டால் அதனை நான் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் எந்த ஒரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவி வேண்டாம் என்று தெரிவிக்க மாட்டார்கள் அதில் நானும் மாறுபட்டவன் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

Previous articleஇந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளது! மக்கள் எச்சரிக்கையாக இருக்க சுகாதார துறை அறிவுறுத்தல்!!
Next articleஇவர்கள் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அவசியமில்லை! திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!!