ரஜினியுடன் இப்படி நடிக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்!! நடிகை குஷ்பூ!!

2021 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி நடிகர் ரஜினி, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா போன்ற உயர்ந்த நட்சத்திரங்கள் நடிப்பில் இப்ப படம் வெளியானது.

இப்படத்தின் கதையினை குஷ்பூவினிடம் கூறும் பொழுது, இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடி இல்லை என்றும் நானும் மீனாவும் மட்டுமே லீட் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் கதை கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை என குற்றம் சாட்டியுள்ளார் நடிகை குஷ்பூ.

படத்தில் தாங்கள் நடித்த பின்பு தான் தங்களுடைய கேரக்டர் என்ன என்பதையே தங்களால் உணர முடிந்தது என்றும், அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் தெரிய வந்ததால் கூறியிருக்கிறார் நடிகை குஷ்பூ.

மேலும் அவர் கூறுகையில், கதைக்களம் மாறியதால் தாங்கள் இடைவேளை வரை மட்டுமே படத்தில் வந்ததாகவும் இந்த கேரக்டர் எதற்காக என்பதுபோல கேள்விகள் எழுந்ததாகவும் குஷ்பூ வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் குஷ்பூவும் இந்த படம் குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.