“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று திருச்சியில் நேரலையில் கலந்து கொண்டார்”. அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போரிடும்’. ‘செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?’ அவர் என்ன ஆரியப்படை தலைவரா?… திமுகவினர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும் ‘பாஷா’ அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதை பார்த்து ஓட்டிற்கு பிச்சை எடுக்கிறீர்களா? என கேள்வி கேட்டார் செய்தியாளர். அதற்கு “சீமானோ, எனக்கு முஸ்லிம்கள் ஓட்டு கிடையவே கிடையாது என நான் நன்கு அறிவேன். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான்தான் முன் நின்று கேள்வி கேட்பேன். அவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செய்யவில்லை. இது என் பிறவி கடமை என்றார்”. மேலும் ‘பாஜக கட்சியான அண்ணாமலையை பார்த்து, உங்கள் அடி மனதில் கைவைத்து சொல்லுங்கள். ஆர் எஸ் எஸ் கட்சிக்கு முஸ்லிம்களை எதிர்ப்பதை தவிர்த்து வேறு ஏதும் கொள்கைகள் உண்டா?’ என்றார்.
“எனது முதல் எதிரி திமுக தான். என்னதான் என்றாலும் ‘நடிகர் விஜய் எனது தம்பி! எதிரி இல்லை!’ அதிமுகவை கண்டு கூட திமுக பயப்படுவதில்லை. என்னை கண்டு தான் பயப்படுகிறது”. இதுவரை இருந்த தலைவர்களில் மிக மோசமான முதல்வர் ‘ஸ்டாலின்’ தான். கேரளா, புற்றுநோய் மருத்துவ கழிவுகளை அங்கிருந்து எடுத்து வந்து தமிழ்நாட்டில் கொட்டுகிறது. இதை நாங்கள் கண்டித்து செயல்பட்ட பின் தான் திமுக அரசு கவனிக்கிறது. இதை முதலில் கவனிக்க வேண்டியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதை கண்டித்து ‘கேள்வி கேட்டால் அது கடவுளின் தேசமா. கேரளா கடவுளின் தேசம்! என்றால் தமிழகம் கண்றாவி தேசமா?’ என சரமாரியாக தாக்கினார்.
” திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் ஐ போன் விழுந்த சர்ச்சை குறித்து ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு சீமான் அவர்களோ, போன் தவறி விழுந்தால் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டியது தானே. அதை விடுத்து உண்டியலில் உள்ளது அனைத்தும் முருகனுக்கே என்பது நியாயமா?” அந்த உண்டியலில் வெடிகுண்டு விழுந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா? இல்லை முருகன் ஐபோனில் பேச போகிறாரா? என நகைச்சுவையாக பேசி உள்ளார்”.
‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் முருகன் கோயிலில் ஆறு மாதம் கழித்து உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூபாய் 52 லட்சம் ரொக்கம், தங்கம் வெள்ளி காணிக்கைகள் உடன் ஒரு ஐபோனும் கிடைத்தது’. அது யாருடையது என கோயில் நிர்வாகம் ஆராய்ச்சி செய்த போது அது சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவருடையது என கண்டறிந்தனர். அவருக்கு தகவலும் அளித்தனர். அவர் செல்போன் கிடைத்துவிட்டது என்ற ஆர்வத்தில் வந்து கேட்டபோது, கோவில் உண்டியலில் உள்ளது முருகனுக்கே சொந்தம். நீங்கள் இதில் உள்ள டேட்டாவை எடுத்துக்கொண்டு செல்போனை தாருங்கள் என நிர்வாகம் கூறி விட்டது. மேலும் அவர் டேட்டாவை எடுத்த பின் காத்திருந்து அந்த போனை பெற்று சென்றது நிர்வாகம். அந்த போனின் மதிப்பு ஒன்றரை லட்சம்” என்பது குறிப்பிடத்தக்கது.