RCB அணியின் கேப்டனாக தோனி இருந்திருக்க வேண்டும்! வாசிம் அக்ரம் அளித்த பேட்டி!!

0
183
#image_title
RCB அணியின் கேப்டனாக தோனி இருந்திருந்தால். வாசிம் அக்ரம் அளித்த பேட்டி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக தோனி இருந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது இல்லை. நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் தொடர்களில் 8 முறை பிளே ஆப் சென்ற ஆர்சிபி அணி இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்றும் மூன்று முறையும் படுதோல்வி அடைந்தது.  இதையடுத்து ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லாததை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ” ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் இந்திய அணியை சேர்ந்த விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருக்கிறார். கடந்த 16 வருடங்களில் ஆர்சிபி அணி பல்வேறு கேப்டன்களின் தலைமையில் செயல்பட்டுள்ளது. இருந்தும் ஆர்சிபி அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்திருந்தால் ஆர்சி அணியிடம் 3 கோப்பைகள் இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
Previous articleதமிழகத்தில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது! ஆய்வாளர் விஜய் ஆனந்த் அறிவிப்பு!!
Next articleஇதை மட்டும் செய்யுங்கள் கால் ஆணி உடனே சரியாகும்!! ஆயுசுக்கும் வராது!!