அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!

Photo of author

By Gayathri

அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!

Gayathri

If only he was here today.. Manivannan is so ignorant!!

திரை திறனாய்வாளர் ஜமால் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மணிவண்ணன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறோம் என்றால் அதற்குரிய ஸ்கிரிப்ட் எதுவுமே அவர் கையில் இருந்ததில்லை. முன்பு நடந்த சீனின் தொடர்ச்சியை மட்டும் எழுதிக் கொண்டு போவாராம். அவருடைய படத்தில் ஒவ்வொரு இடத்தில் எந்த வகை சீனாக இருந்தாலும் அவர் நினைவில் வைத்துக் கொள்வார்.

சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய உதவியாளர்களுக்கு கூட என்ன சீன் இன்று எடுக்கப் போகிறார் என்று தெரியாதாம்!! ஆனால் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பும் போது முழு ஸ்கிரிப்ட்டையும் முடித்து விட்டு தான் செல்வாராம்! அவருக்கு பிரேம் முதல் ஃபைட் வரை அனைத்தும் அத்துபடி! சீனின் டயலாக்கை நொடி பொழுதில் எழுதிவிடுவார்.

ஒரு முறை அவருடைய முதல் படத்தில் 20 நாட்கள் நடைபெற்ற சீன்களை பேப்பரில் எழுதி வைத்திருந்தார். ஆற்று படுகையில் சூட்டிங் ஸ்பாட்டுக்காக வேலை செய்து கொண்டு இருக்கும் போது அனைத்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. முதல் படத்திலேயே இவ்வளவு கவனக்குறைவா! என அங்குள்ள அனைவரும் அவரை பயமுறுத்தியுள்ளனர். மனோபாலா தான் இன்று இரவுக்குள் அவற்றை நினைவு படுத்தி எழுதி வருமாறு கூறியுள்ளார். அன்று இரவு முழுவதும் ஒரு சீன் விடாமல் எழுதி வந்துள்ளார். அடுத்த நாள் பாரதிராஜா குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இவ்வளவு கரெக்டாக எப்படி ஒரு மனிதனால் எழுத முடியும் என்று! அந்த அளவு நேர்த்தியாக ஒவ்வொரு வேலையும் செய்து காட்டியுள்ளவர். அது போக தன் படத்தில் கருத்துக்களை அதிகமாக புதைத்துள்ளார். போற போக்கில் அரசியல் விமர்சனங்களை போட்டு தாக்கியுள்ளவர். அவர் இன்றளவு இருந்திருந்தால் இன்றைய கால அரசியலை மக்களுக்கு எளிமையாக சூட்சமமாக எடுத்துரைந்து இருப்பார். அவர் தீவிர மார்க்ஸிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர். ஆனால் தன் கூட உள்ளவர்கள் மீது எந்த வகையிலும் அரசியல் திணிப்பை செய்தது கிடையாது. அவ்வளவு விஷயங்கள் பொதிந்துள்ள மிக உன்னத திறனாளி. அவர் உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தால், 56 வயதிலேயே உயிரிழந்திருக்க மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.