இது மட்டும் நடக்கலைனா நிச்சயம் நாங்க ஜெயிச்சிருப்போம்! சுப்மன் கில் ஓபன் டாக்!

0
79
If only this hadn't happened, we would have definitely won! Shubman Gill Open Talk!
If only this hadn't happened, we would have definitely won! Shubman Gill Open Talk!

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அனுபவம் வாய்ந்த விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி இந்தத்தொடரில் வெல்வது கடினமே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 364 ரன்களை குவித்தது. மொத்தமாக இந்தியா சார்பில் சுப்மன் கில் 1 சதம், ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸிலும் சதம், ஜெய்ஸ்வால் 1 சதம், ராகுல் இரண்டாவது இன்னிங்சில் சதம் என ஒரே டெஸ்ட்டில் 5 சதங்களை இந்திய அணி குவித்தது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 372 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இருந்தும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 149 ரன்களை குவித்ததன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இந்தியாவை வென்றது. இந்த தோல்விக்கு பிறகு சுப்மன் கில் தோல்விக்கான காரணம் என்ன என்று பேட்டி கொடுத்துள்ளார்.

போட்டியில் கேட்ச் தான் வெற்றிகளை தீர்மானிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம். அதேபோல இரண்டு இன்னிங்சிலும் இன்னும் நிறைய ரன்கள் எங்களால் எடுத்திருக்க முடியும் . இரண்டு இன்னிங்ஸிலும் கடைசி ஐந்து விக்கெட்டுகளை மிகவும் சொற்பமான ர ன்களில் இழந்து விட்டோம். நாங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டிய இடத்தில் ஆட்டத்தை தவற விட்டு விட்டோம். அதுவே எங்கள் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது. அடுத்த ஆட்டத்தில் எங்கள் முழு திறமையை வெளிப்படுத்துவோம் என்று பேட்டி கொடுத்துள்ளார் சுப்மன் கில்.

Previous articleஎனக்கு சப்போர்ட் செய்தால் தேர்தலில் சீட்.. பாமக அருளுக்கு போன பவர்!! அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த அட்டாக்!!
Next articleநான் இதெல்லாம் வேணும்னு செய்யல! என்னை இந்த பிரச்சனையில் சிக்க வச்சுட்டாங்க! ஸ்ரீகாந்த் கதறல்!