பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா? பசவராஜ் பாட்டீல் யட்னல் பதிலடி 

Photo of author

By Savitha

பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா? பசவராஜ் பாட்டீல் யட்னல் பதிலடி

பிரதமர் மோடி விஷ பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கன்னியா என பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பாட்டீல் எத்தனால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் பேசிய எம் எல் ஏ பசவராஜ் பாட்டில் எத்தனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜுனாக்காருக்கு மோடி அவர்களை பிரதமர் என்றும் பாராமல் விஷத்தை கக்கும் பாம்பு என விமர்சனம் செய்கிறார்.

மோடி விஷப்பாம்பு என்றால் சோனியா காந்தி என்ன விஷக்கண்ணியா? என கேள்வி எழுப்பிய அவர் ராகுல் காந்தியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ள அவர் நாட்டிற்கு நற்பெயர் கொண்டு வந்தவர் மோடி என்றும், அவப்பெயரை கொண்டு வந்து பிற நாட்டிற்காக உழைத்தது காங்கிரஸ் கட்சி என்றும் விமர்சனம் செய்தார்.