ஊழல் நிரூபிக்கப்பட்டால் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன்!! அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!!
டெல்லி அரசு, மதுபான விற்பனைகளின் உரிமங்களை தனியாரிடம் வழங்கியுள்ளது. இதில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோதியா கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகிய இருவரிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
நேற்று பஞ்சாப் மாநிலத்திலுள்ள உள்ள லூதியானாவில் நடைபெற்ற ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகளை செயல்பட வைக்கிறார்கள்.
இதற்கு காரணம் நான் ஒரு திருடன், நானும் ஊழல் செய்துள்ளேன் என நிரூபிக்க முயல்கிறார்கள். நான் பிரதமர் அவர்களுக்கு சொல்லி கொள்வது என்னவென்றால் நான் ஊழல் செய்தேன் என நிரூபித்தால் நான் பொது வெளியில் தூக்கில் தொங்குகிறேன் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.