தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

0
295

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது பெரியார், அண்ணா, கருணாநிதி மாடல்களின் கலவையாக தற்போது தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியைச் சார்ந்த பாஜகவினரே கருணாநிதியை விடவும் ஸ்டாலின் ஆபத்தானவர் என்று தெரிவித்து ஒப்புதல் வழங்கி விட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அடுத்த முறையும் திமுக தான் ஆட்சி அமைக்க போகிறது. அதனை யாராலும் தடுக்க முடியாது. ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்ற இந்த நூலில் கலைஞரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்வி பதில்கள் இடம் பெற்றுள்ளன. அதில் முக்கியமான கேள்வியாக திமுகவின் அடையாளமான போருக்குண எதிர் அரசியலை தற்போது பார்க்க முடியவில்லையே ? இது தலைமுறை மாற்றத்தின் விளைவா? அல்லது கால முறை ஓட்டத்தின் சிதைவா? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு கருணாநிதியோ திமுகவின் போர் குணம் குறைந்துவிடவில்லை. அது எப்போதும் குறையாது. இன்றும் ஜனநாயகத்துக்கு எதிராக பாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், திமுகவின் போர் குணத்தை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்று பதில் வழங்கியுள்ளார்.

இந்த சமயத்தில் இந்த கேள்வி பதில் மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது. மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழகத்தின் மாநில நிதி கிடைக்கக்கூடிய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ திமுகவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

Previous articleவிரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!
Next articleஇயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here