இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

Photo of author

By Kowsalya

ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம்.

1. ஒரு பெண் எவ்வளவு சாந்தமாக இருக்கிறாளோ? அதுவே அவர்கள் முகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் தாண்டவமாடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

2. அதுபோல் சுத்தமாக இருக்கும் பெண்களின் வீட்டில் மகாலட்சுமி வருவாள். அதுபோல் பெண்கள் வீண் சண்டை போடுவது, குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுவது, கணவனிடம் காரணமே இல்லாமல் சண்டை போடுவது, பெரியோர்களை மதிக்காமல் இருப்பது இவையெல்லாம் அந்தப் பெண்ணிடம் இருந்தால் மகாலட்சுமி கண்டிப்பாக தங்கமாட்டாள்.அவர்கள் வீட்டிலும் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்காது. அவர்கள் பல வழிகளில் கஷ்டம் அடைவார்கள்.

3. வீட்டில் தேவையில்லாமல் அழுவது மற்றும் கிழிந்த ஆடைகளை அணிவதால் மகாலட்சுமி தங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள்.

4. வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பெரியோர்களை மதிக்க வேண்டும். அதுவும் கணவனின் பெற்றோர்களை மிகுந்த அன்புடன், அனுசரணையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களுக்கு உணவளிக்காமல் இருந்தால் லட்சுமி கடாட்சம் என்றைக்கும் அந்த பெண்ணிற்கு கிடைக்காது.இப்படி செய்து கொண்டு வந்தால் அந்த வீட்டில் வறுமையானது தழைத்தோங்கும். நல்லது தாமதமாக நடக்கும். பணவரவு இருக்காது.

வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் தனது அடுத்த தலைமுறையினருக்கும் பெண்கள் சொல்லித்தர வேண்டும்.

இன்று பல பெண்கள் புகுந்த வீட்டிற்கு அதிலும் தன் மகள்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையே அவர்கள் சொல்லித் தருவதில்லை.

தாயார் என்பவர்கள் தனது மகள்களுக்கு புகுந்த வீட்டு மனிதர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், அனுசரணையாக இருக்க வேண்டும், அதேபோல் அன்புடனும் ஆதரவுடனும் பேசி பழக வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுபோல் பெண்கள் தனது பெற்றோரிடமும், தனது கணவரிடமும், தனது கணவரின் பெற்றோர்களையும் அனுசரித்து நடக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.