அனைவருடைய வாழ்க்கையிலுமே வேலை என்பது முக்கியமான ஒன்றாகும். அனைவரது வாழ்க்கையின் ஆதாரமுமே வேலையில் தான் உள்ளது. எனவே அனைவருமே வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே ஒருவருடைய குடும்பம் நல்ல நிலைக்கு வர முடியும். ஒருவர் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் கூட அவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தால் மட்டுமே அந்த உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எவ்வாறு இருந்தால் அவருக்கு தொழில் மற்றும் வேலை பலன் அளிக்கும் என்பது குறித்து காண்போம். ஒருவரின் ஜாதகத்தில் சனியானது மகரம் கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் அது சனியின் ராசியாக கருதப்படுகிறது. மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் இருந்தால் அது சனி நீச்சம் அடையக்கூடிய ராசியாக கூறப்படுகிறது. கடகம் மற்றும் சிம்ம ராசிகள் சந்திரன் மற்றும் சூரியனின் வீடாக கருதப்படுகிறது.
எனவே ஒருவரின் ஜாதகத்தில் சனியானது இந்த ஆறு ராசிகளில் இருந்தால் அவர்கள் வேலைக்காகவும், பணத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். மேலும் ஒரு நிலை இல்லாத வேலையாகவும் இருக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லாத போராட்டமாகவே இருக்கும்.
உங்கள் ஜாதகத்தில் சனி வக்கிரமாகி இருந்தால் அல்லது சனி ஏதாவது ஒரு கிரகத்துடன் பரிவர்த்தனையாகியிருந்தால் அந்த ஜாதகத்தினர் அயராது வேலைக்காக போராடிக் கொண்டே இருப்பார்கள். சனியானது வக்கிரமாகி இருந்தால் அவர்களது வாழ்க்கையில் 27 வயது வரை நன்றாக இருக்கும். அதன் பிறகு 35 வயது வரை வேலைக்காக போராடுபவர்களாகவும் 35 வயதுக்கு பிறகு தான் வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் சனி இருக்கக்கூடிய கட்டத்தில் கேது இருந்தாலோ அல்லது சனி இருக்கக்கூடிய கட்டத்தில் இருந்து ஐந்தாவது இடத்திலோ ஒன்பதாவது இடத்திலோ கேது இருந்தாலோ அவர்களது வேலையானது அல்லது தொழிலானது சிறந்து விளங்கும். ஆனால் முன்னேற்றம் இருக்காது. அதாவது அவர் தற்போது இருக்கக்கூடிய நிலையிலேயே இருப்பாரே தவிர அடுத்த நிலைக்கு உயர மாட்டார்.
திறமையானவர்களாக இருந்தாலும் கூட இத்தகைய ஜாதக நிலை இருப்பவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் அடுத்த வேலை அடுத்த வேலை என மாறிக்கொண்டே இருப்பார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் சனியும் குருவும் இணைந்து இருந்தால் அவர்கள் தொழிலில் சாதனை படைப்பவர்களாக இருப்பார்கள். ஒரு வேலையை எளிதாக முடிப்பவர்கள் ஆகவும் இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு கீழ் வேலை செய்யக்கூடாது என எண்ணபவர்கள் அவர்கள். அத்தகைய எண்ணத்தை ஜாதகச் சேர்க்கை ஏற்படுத்தி விடும்.
இத்தகைய சனி சேர்க்கை உள்ளவர்கள் உயிரினங்களுக்கு ஏதேனும் ஒரு பொருளை தானமாகவோ, அன்னதானமாகவோ கொடுத்து உதவினால் இந்த பிரச்சனைகளில் இருந்து சற்று விலகலாம்.