நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

0
189
#image_title

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”.

வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை . அவர்களது வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் நீர்நிலை பகுதியில் வாழ்வோர் ஏழைகள் , அவர்களை தொல்லை செய்ய வேண்டும் என எங்களுக்கும் ஆசையில்லை .

ஆனால் நீர்நிலை புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு சென்று நிற்க வேண்டிய நிலை ஏற்படும் , அனைத்து நீதிமன்றங்களுமே நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்ற வேண்டும் என்கின்றன .

நீர்நிலைப் புறம்போக்கில் வாழ்வோர் குறித்து கருணை ஒருபக்கம் இருக்கிறது , நீதி ஒருபக்கம் இருக்கிறது.

ஆனால் வேறு வழியில்லை , நீர் நிலை புறம் போக்குகளை அகற்றித்தான் ஆக வேண்டும் என பதிலளித்தார்.

Previous articleஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!
Next articleதனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!!