திரைத்துறையில் தயாரிப்பாளராக விளங்கும் மாணிக்கம் நாராயணன் அவர்கள் தனுஷ் மற்றும் நயன்தாராவின் உடைய பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அவர்கள் மீடியா சர்கிள் youtube சேனலில் பேசிய பொழுது, நடிகர் அஜித் கூட தான் என்னை ஏமாற்றினார். எங்க பார்த்தாலும் நான் அவரை முறைத்துக் கொண்டே இருப்பேன். தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசினாலோ அல்லது இவர்களுக்கு இடையில் ஒரு பெரிய மனிதரை வைத்து பேசினாலோ இந்த பிரச்சினை ஆனது முடிந்துவிடும். ஆனால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்தி தங்களுடைய தரத்தை தாங்களே குறைத்துக் கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் தயாரிப்பாளர்.
மேலும் பேசிய அவர், நடிகர் தனுஷ் அவர்களுக்கு நல்ல வேலை உள்ளது. அதிகப்படியான சம்பளம் வாங்கக்கூடிய உயர்ந்த நடிகராக தற்பொழுது விளங்கி வருகிறார். இவராவது இந்த விஷயத்தில் விட்டுக் கொடுத்து சென்றிருக்கலாம்.
அல்லது, நடிகை நயன்தாராவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் நுழைந்த நயன்தாரா அவர்கள் பொறுமையாக நின்று தனுஷ் அவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் ஒருவருக்கொருவர் நேரடியாகவே மற்றொருவரை தரம் குறைத்து பேசவும் நடத்தவும் செய்கின்றனர் என்று கூறி இருக்கிறார்.
குறிப்பாக, என்னை பொருத்தவரையில் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. இருவரும் இவர்களுக்கிடையே உண்டான பிரச்சனையை ஒரு பெரிய மனிதரை வைத்தோ அல்லது வக்கீலை வைத்தோ பேசி முடித்திருப்பது தான் என்னை பொறுத்தவரையில் சரியானதாக கருதுவேன்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தால், அப்போதே நடிகர் தனுஷ் அவர்கள் உங்களுடைய டாக்குமெண்டரியில் வரக்கூடிய பணத்திலிருந்து தனக்கு ஏதேனும் பங்கினை அளிக்கும்படி வெளிப்படையாக கேட்டிருக்கலாம். அல்லது நயன்தாராவாவது தன்னுடைய டாக்குமெண்டரியில் கிடைக்கக்கூடிய லாபத்திலிருந்து பாதியினை நடிகர் தனுஷ் அவர்களுக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நமக்கு தெளிவான சிந்தனை இருந்தால் யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என்னைக் கூட அஜித் அவர்கள் ஏமாற்றி விட்டார். அதற்காக நான் அவரை எங்கு கண்டாலும் முறைத்துக் கொண்டே இருப்பேன் என்று தெரிவித்த அவர், மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும் என்றும் கூறியுள்ளார்.