பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

0
126
#image_title

பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

1952 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பராசக்தி. மாபெரும் புரட்சி படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது. இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார். பி. ஏ. பெருமாள் தயாரித்தார். திரைக்கதை- வசனம் சொல்லவே தேவையில்லை கலைஞர் தான். நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இப்படத்தில் நடித்த இருப்பினும் பராசக்தி படத்தின் நாயகன் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான்.

கலைஞர் அவர்களின் எழுதிய வசனங்கள் அனைத்தும் அப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது. சமூகப் புரட்சி படமாக உருவாகி தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான புரட்சிப் படங்கள் உருவாக பராசத்தி படம் அடித்தளமாக அமைந்தது. இப்படம் குறித்து பிரபல இயக்குநரான வெற்றிமாறன் அவர்கள் தனது கருத்தை விழா ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

சமூக பிரச்சனைகள் குறித்து நான் எடுக்கும் படங்கள் அனைத்திற்கும் அடித்தளமாக உள்ளது. பராசக்தி படம் தான் சமூகப் புரட்சி படங்கள் வணீக ரீதியாக வெற்றியடையும் என்பதை காட்டியது. என் வெற்றிகளுக்கு தன்னமிக்கை அளிப்பதும் பராசக்தி படம் தான் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார். இன்று தமிழ் சினிமாவில் பல்வேறு புரட்சி படங்கள் சமூக மாற்ற படங்கள் வெளியாவதற்கு “பராசக்தி” படம் என்று பெருமிதத்துடன் வெற்றிமாறன் அவர்கள் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பொல்லாதவன், ஆடுகளும், விசாரணை, அசுரன், வடசென்னை விடுதலை போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருந்தாலும் அனைத்தும் வெற்றி படங்கள் தான். இதில் வடசென்னை மக்களை பற்றி பேசிய “வட சென்னை” படவும் விளிம்பு நிலை மக்களை பற்றி பேசிய அசுரன் படமு,ம் விடுதலை படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. தற்போது விடுதலை -2, வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கிய வரும் இயக்குனர் வெற்றிமாறன், தான் தொடர்ந்து மக்கள் சார்ந்த படங்களை தான் இயக்க விரும்புவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?
Next articleசோனி லைவ் ஓடிடி தளத்தை கலக்கும் ஸ்கேம்-2003 !!